
चेन्नई: तमिलनाडु के मुख्यमंत्री सी. जोसेफ विजय ने राज्य में खेल प्रतिभाओं को बढ़ावा देने के लिए 'ड्रीम ओलंपिक्स' पहल की शुरुआत की है। गुरुवार, 8 अक्टूबर 2026 को चेन्नई के द लीला पैलेस में आयोजित विशेष समारोह में मुख्यमंत्री ने एशियन गेम्स 2026 और 46वें चेस ओलंपियाड में शानदार प्रदर्शन करने वाले खिलाड़ियों को नकद पुरस्कार देकर सम्मानित किया। कार्यक्रम का आयोजन तमिलनाडु खेल विकास प्राधिकरण (SDAT) की ओर से किया गया था।
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒருங்கிணைப்பில் '20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்-வீராங்கனையர்களுக்கு பாராட்டு விழா' சென்னையில் நடைபெற்றது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த விழாவினை தலைமை தாங்கி வீரர் - வீராங்கனையர்களுக்கு சிறப்புப் பரிசு மற்றும் ஊக்கத்தொகையினை வழங்கி வாழ்த்தினார்கள். உலக அரங்கில் இந்திய நாட்டின் பெருமையையும் தமிழக இளைஞர்களின் திறனையும் நிலைநாட்டி, வரலாற்றுச் சாதனையாளர்களாகத் தடம் பதித்த நம் வீரர் - வீராங்கனையர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள் அனைவரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து மனம்நிறையச் செய்தனர். முதன்முறையாக விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்காக நான்கு இலக்கத்தில் பட்ஜெட் ஒதுக்கீடு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகள் அனைத்திலும் முழுவதுமாக ஏசி வசதி வழங்க அறிவிப்பு, பெண்கள், இளைஞர்கள், கிராமத்துப் பின்புலம் உடையவர், விளிம்புநிலையினர், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விளையாட்டுத் திட்டங்கள், உலகத்தர நவீன விளையாட்டு கட்டமைப்பு மற்றும் பயிற்சி, பயிற்சியாளர்களுக்கு பிரத்யேக திறன் மேம்பாடு, தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் நம் இளைஞர்கள் எந்தவித தடையுமின்றி இலக்கை நோக்கிப் பயணிக்கச் சிறப்பு ஊக்கத்தொகை, ஒலிம்பிக் கனவு எனத் தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை நிகழ்த்தி வருகிறோம். பெருங்கனவைச் சுமந்து, பேருழைப்பை செலுத்தி, பேராற்றலுடன் வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் நம் வீரர் - வீராங்கனையர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய நாட்டின் அடையாளமாகவும் உலக அரங்கில் வெற்றி நாயகர்களாகவும் தமிழக இளைஞர்கள் அனைத்து விதத்திலும் சிறந்து விளங்குவார்கள். 1/5
— Aadhav Arjuna (@AadhavArjuna) October 9, 2026





